உள்நாடு

கொழும்பு வாழ் மக்களுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – கொழும்பின் சில பகுதிகளில் நாளை மறுதினம்(05), 14 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

நாளை மறுதினம்(05) சனிக்கிழமை இரவு 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை(06) முற்பகல் 10 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை (NWS&DB) தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், கொழும்பு 07, 08, 10, 12, 13, 14 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த காலப்பகுதியில் கொழும்பு 02, 03 மற்றும் 11 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படவுள்ளது.

அவசர திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை கூறியுள்ளது

Related posts

இன்றும் 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரை சந்தித்த முஸ்லிம் சமய பண்பாட்டு திணைக்களம்.

editor

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,989 ஆக பதிவு