உள்நாடு

கொழும்பு வந்தார் யுவன் சங்கர் ராஜா!

(UTV | கொழும்பு) –

பாடகி பவதாரணி நேற்று இலங்கையில் உயிரிழந்த நிலையில், அவரது சகோதரரும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா இன்று காலை இலங்கைக்கு வருகைத் தந்தார். தற்போது பவதாரணியின் உடல் வைக்கப்பட்டுள்ள கொழும்பில் உள்ள மலர்சாலைக்கு சென்றுள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பாடகி பவதாரணி கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி மாலை உயிரிழந்தார். இந்த நிலையில், இசை நிகழ்ச்சிக்காக இலங்கைக்கு வருகைத் தந்திருந்த இசைஞானி இளையராஜா உடனடியாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு விரைந்ததுடன், அதன் பின்னர் பவதாரணியின் உடல் கொழும்பில் உள்ள மலர் சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மேலும், இசைஞானி இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினர் தற்போது கொழும்புக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொவிட்-19 : மத்திய கிழக்கு நாடுகளில் 23 இலங்கையர்கள் பலி

போராட்டத்தின் மீது காலாவதியான கண்ணீர்ப்புகை மற்றும் சிஎஸ் கேஸ் வீசப்பட்டது

எதிர்பார்க்கப்பட்ட அரச வருமானத்திற்கு மேலதிகமான 6% வளர்ச்சியை கண்ட இலங்கை