சூடான செய்திகள் 1

கொழும்பு – மட்டகளப்பு ரயில் சேவையில் மட்டு

(UTV|COLOMBO) – கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த மீனகயா கடுகதி ரயில் தடம்புரண்டமை காரணமாக, குறித்த அந்த வழித்தடம் ஊடான ரயில் சேவைகள் மஹவ ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மிக விரைவாக குறித்த ரயில் போக்குவரத்தில் ரயில் சேவைகளை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்வதாக ரயில் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு கொழும்பு – கோட்டையிலிருந்து பயணித்த மீனகயா ரயில் அவுகன உப ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டமை காரணமாக நேற்றிரவு குறித்த ரயில் போக்குவரத்தில் முன்னெடுக்கப்படவிருந்த ரயில் சேவை இரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதியின் முக்கிய உரை – தமிழில்

பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர விளக்கமறியலில்

பாராளுமன்ற திடீர் கலைப்புக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வழக்கு தாக்கல் செய்ய முடிவு!!!