உள்நாடு

கொழும்பு மக்களுக்கான நிவாரண தொகை வழங்கும் திட்டம் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட மக்களுக்கான நிவாரண உதவித் தொகை வழங்கும் திட்டம் இன்று (05) முதல் ஆரம்பமாகவுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட தபால் அலுவலகங்களில் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை நிவாரண உதவித் தொகை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் ரோஷனி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நிவாரண உதவித் தொகையை பெற்றுக் கொள்வதற்காக 13,000 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

மக்களின் சுகாதார பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ள திகதியின் அடிப்படையில் இந்த உதவித் தொகையை பெற்றுக் கொள்வதற்காக சமூகமளிக்குமாறு கொழும்பு மாநகர ஆணையாளர் கூறியுள்ளார்.

பொலிஸார் அந்தந்த பகுதிகளுக்கு சமூகமளித்து கொடுப்பனவு வழங்கப்படும் தினத்தை அறிவிப்பர் எனவும் அதனடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ள தபால் அலுவலகங்களுக்கு சென்று கொடுப்பனவை பெற்றுக் கொள்ளுமாறும் கொழும்பு மாநகர ஆணையாளர் ரோஷனி திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் விபத்து-21 பேர் காயம்

டெங்கு பரவலை கட்டுப்படுத்த ஜனாதிபதி ஆலோசனை

சரண குணவர்தனவிற்கு பிணை [VIDEO]