வகைப்படுத்தப்படாத

கொழும்பு பிரதேச குப்பைகள் தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதற்கு பிரதமர் நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – கொழும்பு புறக்கோட்டை பிரதேசங்களில் குப்பைகள் தேவையற்ற விதத்தில் குவிக்கப்பட்டதன் காரணமாக எதிர்நோக்கப்பட்டுள்ள பிரச்சினை குறித்த விடயங்களை கண்டறிவதற்காக பிரதமர் ரணில் விக்கிரம சிங்க  அப்பிரதேசத்திற்கு விஜயம் செய்தார்.

பிரதமருடன் நேற்று காலை பிரதமர் அலுவலக பணியாளர் சபையின் தலைமை அதிகாரியும் , சட்ட  ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்கவும் சென்றிருந்தார்.

போதிராஜ மாவத்தை மற்றும் இலங்கை போக்குவரத்துசபை பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகாமையிலும் குவிக்கப்பட்டிருந்த குப்பைகளை பிரதமர் பார்வையிட்டார்.

பிரதமருடன் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோரும் சென்றிருந்தனர்.

Related posts

துறைமுக நகர திட்டத்தை பார்வையிட்ட பிரதமர்

“Bill and Ted Face the Music” filming kick off

ராமர் பாலத்தை ஆய்வு செய்யும் திட்டம் இல்லை!