வகைப்படுத்தப்படாத

கொழும்பு பல்லைக்கழக மோதல் சம்பவம் ; மாணவர்களுக்கு பிரவேசத் தடை

(UDHAYAM, COLOMBO) – கொழும்பு பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 2ம்,3ம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு பிரவேசத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பீடாதிபதி பேராசிரியர் அதுல ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையில் உள்ள விடுதியில், இரண்டு மாணவர்கள் குழுக்களுக்கு இடையில் நேற்றையதினம் மோதல் ஒன்று இடம்பெற்றது.

இதனை அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மோதலில் காயமடைந்த நான்கு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோதலை அடுத்து குறித்த விடுதியில் இருந்தும் மாணவர்களை வெளியேற பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தொண்டைமானாறு கடற்பிரதேசத்தில் 56.6 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

තලවකැලේ නගරයේ වෙළඳසැල් හදිසි පරීක්‍ෂාවකට

தங்க சுரங்கத்தில் சிக்கி 23 பேர் உயிரிழப்பு?