உள்நாடு

கொழும்பு பணவீக்கம் மேலும் வீழ்ச்சி

2025 பெப்ரவரி மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (கொ.நு.வி.சு.) மற்றும் கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் மேலும் குறைந்துள்ளது.

கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் 2025 பெப்ரவரி மாதத்தில் -4.2% ஆகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்ட சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது 2025 ஜனவரி மாதத்தில் -4.0% ஆக பதிவாகியிருந்தது.

அதேபோல், 2025 பெப்ரவரி மாதத்தில் உணவுப் பிரிவின் ஆண்டு பணவீக்கம் -0.2% ஆக உயர்ந்துள்ளது. இது 2025 ஜனவரி மாதத்தில் -2.6% ஆக பதிவாகியிருந்தது.

மேலும், 2025 பெப்ரவரி மாதத்தில் உணவு அல்லாத பிரிவின் ஆண்டு பணவீக்கம் -6.1% ஆகக் குறைந்துள்ளது. இது 2025 ஜனவரி மாதத்தில் -4.7% ஆக பதிவாகியிருந்தது.

Related posts

சிறைச்சாலை வளாகத்தினுள் பாரிய மரம் வீழ்ந்ததில் சிறைக் கைதி ஒருவர் பலி – 10 பேர் காயம்

editor

அரச நிறுவன பிரதானிகள் தொடர்பில் அரசு தீர்மானம்

பேருவளை மீன்பிடி துறைமுக செயற்பாடுகள் வழமைக்கு