உள்நாடுவணிகம்

கொழும்பு பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி

(UTVNEWS | COLOMBO) -கொழும்பு பங்குச் சந்தை இன்று கடுமையான வீழ்ச்சியைக் கண்டுள்ளது.

இன்றைய நாள் முடிவில், அனைத்து பங்கு விலைக் குறியீடு 127.25 புள்ளிகள் குறைந்து 5,898.84 புள்ளிகளாக காணப்பட்டது.

அதன்படி, அனைத்து பங்கு விலைக் குறியீடும் எஸ் அண்ட் பி எஸ்எல் 20 குறியீடும் முறையே 2.11% மற்றும் 2.64% வீழ்ச்சியடைந்துள்ளது.

பங்குச் சந்தையின் வருமானம் 624.43 மில்லியனாக இருந்தது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக உலகம் முழுவதும் உள்ள முதலீட்டுச் சந்தைகளில் பிரதிபலித்து வருவதாக பங்குச் சந்தை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 37 பேர் கைது

பெலியத்த கொலை – அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்கள்

மின்தடை காரணமாக ரயில் சேவைகளில் பாதிப்பு