உள்நாடு

கொழும்பு துறைமுக நகர நடைபாதை மக்கள் பாவனைக்கு

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுக நகர நடைபாதை இன்று (10) மக்கள் பாவனைக்காக திறக்கப்படவுள்ளது.

500 மீட்டர் நீளத்திற்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள கொழும்புத் துறைமுக நகர நடைபாதையினை இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரையில் தினந்தோறும் பொதுமக்கள் பயன்படுத்த முடியும்.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் உள்ள கொழும்புத் துறைமுக நகர நுழைவாயில் ஊடாக உட்பிரவேசிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான இராஜதந்திர உறவின் 65 ஆவது வருட பூர்த்தியினை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வின் போது, குறித்த நடைபாதை நேற்று (09) திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ (Wang Yi) உள்ளிட்டோர் பங்கேற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சுதந்திர தினத்தன்று போராட்டத்திற்கு அழைப்பு!

‘விஷம் கலந்த அரிசி இலங்கைக்கு கொண்டு வரவில்லை’

கொரோனாவிலிருந்து மேலும் 14 பேர் குணமடைந்தனர்