உள்நாடு

கொழும்பு துறைமுக ஊழியர்கள் தனிமைப்படுத்தலுக்கு

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுகத்தின் ஊழியர்கள் உள்ளிட்ட 19 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக துறைமுக அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து ஐ.ஓ.சி நிறுவனத்திற்காக திருகோணமலை துறைமுகத்திற்கு எரிபொருளை கொண்டு வந்த கப்பலின் பணிக்குழாமின் 17 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதியானதை தொடர்ந்து குறித்த நடடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த கப்பல் முதலில் கொழும்பு துறைமுகத்திற்கு வந்ததன் பின்னரே திருகோணமலைக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இந்த கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பிரதமருடன் GMOA இன்று கலந்துரையாடல்

ரயில் போக்குவரத்து சேவையில் இருந்து விலக தீர்மானம்

தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கு- நீதிமன்றம் ஒத்திவைப்பு