உள்நாடு

“ கொழும்பு தாமரைக் கோபுர களியாட்ட நிகழ்வில் இளைஞனும், யுவதியும் பலி”

கொழும்பு  தாமரைக் கோபுரத்துக்கு அருகில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வொன்றில் இடம்பெற்ற விருந்தில் கலந்துகொண்ட இருவர் உயிரிழந்துள்ளனர். 27 வயதுடைய யுவதி ஒருவரும் 22 வயதுடைய இளைஞனுமே இவ்வாறு  உயிரிழந்துள்ளனர்.

இந்த விருந்தின்போது அவர்கள் போதைப்பொருள் உட்கொண்டதாக கூறப்படுகிறது.

இதன்போது  இருவரும் சுகவீனமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த இருவரின்  நீதிவான் விசாரணைகள் மாளிகாகந்த நீதிவானால் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது இவர்களின் பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதிவான்  உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, தனது மகளின் மரணத்தில் சந்தேகம்  காணப்படுவதாக  உயிரிழந்தவரின் தாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த விருந்தில் உயிரிழந்த  யுவதி உட்பட 7 பேர் போதைப்பொருளை உட்கொண்டதாகவும், அவரது காதலன் என கூறிக்கொள்ளும் இளைஞர் ஒருவரும் போதைப்பொருளை உட்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீற்றருக்கும் அதிகளவான மழை வீழ்ச்சி

இந்தியாவில் இருந்து மற்றுமொரு மாணவக் குழு இலங்கைக்கு

நாளைய தினம் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்