வகைப்படுத்தப்படாத

கொழும்பு குப்பை கூழங்கள், பிலியந்தலைக்கு

(UDHAYAM, COLOMBO) – மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவிற்கு பின்னர் கொழும்பு நகர சபையால் சேகரிக்கப்படும் குப்பை கூழங்களை கொட்டுவதற்காக பிலியந்தலை கரதியான பகுதியில் இடம்பெற்று கொடுக்குமாறு கொழும்பு மாநகர சபை, கெஸ்பேவ நீதிமன்றத்தில் நேற்று கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த கோரிக்கைக்கு அமைய நேற்று மாலை முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நாள் ஒன்றுக்கு 350 மெட்ரிக் டொன் குப்பையை ஏற்றுக்கொள்ளுமாறு கெஸ்பேவ நீதிமன்றத்தால் திடக்கழிவு முகாமைத்துவ அதிகார சபைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவிற்கு அமைய குப்பையை கொட்டுவதற்கான வசதியை பெற்று தருவதாக கழிவு முகாமைத்துவ அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது குப்பை கொட்டுவதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ள பகுதியை சுற்றி காவற்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஆகக்கூடிய பலன்கள் கிட்டக்கூடிய அபிவிருத்தி முறையொன்றை அறிமுகப்படும் – பிரதமர்

சூப்பரான தேங்காய் பிஷ் பிரை செய்வது எப்படி?

Postal strike this evening