உள்நாடு

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதி நாளை மறுதினம் திறக்கப்படமாட்டாது

(UTV|கொழும்பு) – கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதி போக்குவரத்திற்காக நாளை மறுதினம்(22) திறக்கப்படாது என வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் சமிந்த அத்துலுவாகே தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் ஊரடங்கு உத்தரவினை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நீடித்ததை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னர் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை எதிர்வரும் 22 ஆம் திகதி திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஏற்கெனவே அறிவிக்கப்படி, தெற்கு அதிவேக வீதியில் கொட்டாவ – ஹம்பாந்தோட்டை வரையான பகுதி திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வீடியோ | எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உலக விவகாரங்களுக்கான இத்திய கவுன்சிலில் உரையாற்றினார்

editor

பாதாள உலகக் குழு, போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு ஆதரவளிக்கும் அரசியல்வாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் – பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய

editor

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மைத்திரி எதிர்ப்பு