சூடான செய்திகள் 1

கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு 18 மணி நேர நீர் வெட்டு

(UTV|COLOMBO) கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு இன்று(09) 18 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இன்று(09) இரவு 09.00 மணி முதல் நாளை(10) பிற்பகல் 03.00 மணி வரை
கொழும்பு 01, 13, 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

புறக்கோட்டை பிரதேசத்தில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறவுள்ளதாக அந்த சபை அறிவித்துள்ளது.

இதேவேளை, வீதி அபிவிருத்தி பணி காரணமாக சில பிரதேசங்களுக்கு நாளை(10) அதிகாலை 04.00 மணி முதல் 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

மொரகஸ்முல்ல, ராஜகிரிய, எதுல்கோட்டே, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, நாவல, கொஸ்வத்தை மற்றும் ராஜகிரியிலிருந்து திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதிகள் மற்றும் உள்வீதிகள் ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

 

 

 

 

 

Related posts

புகையிரத சேவைகள் வழமைக்கு

ஹஜ் விழாவின் இறுதி நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்!

மன்னார் நகர அபிவிருத்தி தொடர்பாக எழுந்துள்ள உண்மைக்கு புறம்பான கருத்து