உள்நாடு

கொழும்புக்கு 18 மணித்தியால நீர் வெட்டு

(UTV | கொழும்பு) – நாளை காலை 8 மணி முதல் மறுநாள் அதிகாலை 2 மணி வரை சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸ, கோட்டை, கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகரசபை பகுதிகள், கொட்டிகாவத்தை, முல்லேரிய பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள், இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பகுதிகளில் 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும்.

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.

Related posts

ஒவ்வாமை காரணமாக 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பில் சீனதூதரகத்தினால் ஆதரவற்றோருக்கான வீட்டுத்திட்டம்

மைத்திரிபால செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிப்பு!