உள்நாடு

கொழும்பில் 16 மணிநேர நீர் வெட்டு!

(UTV | கொழும்பு) –

கொழும்பின் சில பகுதிகளில் 16 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அம்பதலை நீர் விநியோகத் தொகுதியில் அத்தியவசிய பராமரிப்பு வேலைகள் காரணமாக குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நாளை 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப. 5 மணி முதல் மறுநாள் 25ஆம் திகதி சனிக்கிழமை மு.ப. 9 மணி வரையிலான 16 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கவலை தெரிவிப்பதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இதுபற்றிய மேலதிக விபரங்களை 1939 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிந்துகொள்ள முடியும்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கிளைபோசேட் தடையை நீக்க அரசு தயார்

உக்ரேன் பயணிகள் ஆதிக்கத்தால் வலுக்கும் வருவாய்

உள்ளூராட்சிமன்ற நிரந்தரமற்ற ஊழியர்கள் அனைவரும் அரச நிரந்தர ஊழியர்களாக்கப்படுவார்கள்!