உள்நாடு

கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

கொழும்பின் சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

கொழும்பிற்கு நீர் வழங்கும் பிரதான குழாய்த்திட்டத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (16) மாலை 6.00 மணி முதல் நாளை மறுநாள் (17) காலை 6.00 மணி வரை 12 மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக அந்த சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கான நீர் விநியோகம் இவ்வாறு தடை செய்யப்படவுள்ளது.

Related posts

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளுக்கு

“பிச்சை எடுத்தாவது பிள்ளைகளுக்கு வேளைக்கு உணவை வழங்குவேன்”

மாகாண கொடியை சீரமைக்க கிழக்கு ஆளுநருக்கு ஹரீஸ் எம்.பி வேண்டுகோள் !