உள்நாடு

கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்

(UTV|கொழும்பு) – 72 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒத்திகை காரணமாக கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை(31) மற்றும் எதிர்வரும் 2, 3ஆம் திகதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த இந்த தினங்களில் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த சில வீதிகள் முழுமையாக மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய சில வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

நாட்டில் 82 கொவிட் மரணங்கள் பதிவு

ஜனாதிபதியினால் விசேட குழு ஸ்தாபிப்பு

துப்பாக்கி பிரயோக சம்பவம்; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்