உள்நாடு

கொழும்பில் வழுக்குக்கும் ‘டெல்டா’

(UTV | கொழும்பு) – அண்மையில் டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்ட 18 பேரில் 11 பேர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டிருப்பதாக, கொழும்பு மாநகரசபையின் பிரதான வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

அவர்களில் ஐந்து பேர் கெத்தாராம விளையாட்டரங்கில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டவர்கள்.

இரண்டு பேர் தெமடகொடையிலும் இரண்டு பேர் வட கொழும்பிலும் உள்ளவர்கள் என்று அவர் கூறியுள்ளார்.

அதேநேரம் யாழ்ப்பாணம் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் டெல்டா திரிபுடனான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இதன்படி நாட்டில் டெல்டா திரிபுடன் கூடிய 36 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கையில் திருப்தியில்லை

அஜித் பிரசன்ன உட்பட இருவர் மீண்டும் விளக்கமறியலில்

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு