உள்நாடுவகைப்படுத்தப்படாத

கொழும்பில் பெருமளவில் ஆயுதம் தாங்கிய படையினர் குவிப்பு – காரணம் வெளியாகியது !

(UTV | கொழும்பு) –    கொழும்பில் நேற்று முதல் பெருமளவில் ஆயுதம் தாங்கிய படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு பல்கலைக்கழக சுற்றுவட்டாரத்தை அடிப்படையாக கொண்டு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அதிவிசேட படையினர், சிறப்பு கொமாண்டோ, பொலிஸார், கலகம் தடுக்கும் குழுவினர், நீர் தாரகை வாகனங்கள் அணி வகுத்து காத்திருக்கின்றன.
நாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை (12) மாலை 6.00 மணி முதல் 15 திங்கட்கிழமை காலை 6.00 மணி வரை நாடளாவிய ரீதியில் விசேட குற்றத்தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார்.

இந்த சிறப்பு நடவடிக்கையில், அனைத்து முக்கிய வீதிகளிலும், இரவும் பகலும் தொடர்ச்சியான சோதனைச் சாவடிகள் அமைக்கப்படுவதோடு, வீதிகளில் பயணிக்கும் அனைத்து வகையான வாகனங்களையும் உள்ளடக்கி சோதனை நடத்தப்படும். குற்றச்செயல்கள் அதிகம் நடக்கும் பகுதிகளில் இரவுநேர ரோந்துப் பணி அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கும் அதிகளவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்கவுள்ளதால், வன்முறைகள் வெடிக்கலாம் என்ற அச்சம் காரணமாக இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவுகின்றமையும் குறிப்பிடத்தக்கது WATCH FULL DETAILS

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பால்மா தட்டுப்பாடு இம்மாத இறுதி வரை தொடரும்

கொரோனா ஜனாஸாக்களுக்கு ஓட்டமாவடி பச்சைக்கொடி [VIDEO]

பாராளுமன்ற அமர்வு தொடர்பிலான தீர்மானம்