கிசு கிசு

கொழும்பில் பிரபல பெண்கள் பாடசாலையின் மாணவிகள் செய்த காரியம் அம்பலம்?

(UTV|COLOMBO)-கொழும்பிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிகள் இருவரின் மோசமான செயற்பாடு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

பாடசாலை மாணவிகளான இருவர், தமது காதலர்களுடன் தகாத நடவடிகையில் ஈடுபட்ட போது மாணவகளில் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை செல்வதாக கூறி விட்டை விட்டு சென்ற மாணவிகள் இருவர், காதலர்களுடன் மீகொட பொலிஸ் பிரிவிலுள்ள ஒரு மாணவியின் வீட்டிற்கு சென்று தகாத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஒரு மாணவி மற்றும் அவரது காதலரை மீகொட பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவி வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அங்கு அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார் என சட்ட வைத்தியர் தெரிவித்துள்ளார்.

ராஜகிரிய பிரதேச பாடசாலையில் கல்வி கற்கும் இந்த மாணவிகள் இருவர் அந்த பிரதேச பாடசாலை மாணவர்கள் இருவருடன் காதல் தொடர்பு ஏற்படுத்தி கொண்டுள்ளனர்.

பட்டவல வீட்டில் வசிக்கும் மாணவி தனது பெற்றோர் வீட்டில் இல்லாத போது தனது காதலனையும், நண்பியையும், அவரின் காதலனையும் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

குறித்த சந்தர்ப்பத்தில் மாணவியின் தந்தை திடீரென வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது வீட்டினுள் யாரோ இருப்பதனை அவதானித்த தந்தை வீட்டிற்கு பின்னால் மறைந்திருந்து பார்த்துள்ளார்.

திடீரென கதவை திறந்த போது ஒரு மாணவியின் காதலன், தந்தை தாக்கிவிட்டு காதலியை அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளார். அவ்வாறு சென்றவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தந்தை வழியில் மகன்

பட்டாசுகள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை இல்லை

நாமலின் மனைவி நாட்டை விட்டும் வெளியேறினார்