உள்நாடுபுகைப்படங்கள்

கொழும்பில், பாகிஸ்தான் தேசிய தின நிகழ்வு!

பாகிஸ்தான் தேசிய தின நிகழ்வு இன்று (23) கொழும்பில் உள்ள பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இலங்கையைச் சார்ந்த பாகிஸ்தான் சமூகத்தினர் கணிசமானோர் கலந்துகொண்டனர்.

ஆகஸ்ட் 14, 1947 அன்று பாகிஸ்தான் உருவாக்கத்தின் அடிப்படையாக அமைந்த வரலாற்று சிறப்புமிக்க 1940 லாகூர் தீர்மானத்தின் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 23ஆம் திகதி பாகிஸ்தானின் தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. இம்முறை தேசிய தின நிகழ்வில் பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) ஃபஹீம்-உல் அஸீஸ் பாகிஸ்தானின் தேசிய கீதம் இசைக்கப்படும்போது பாகிஸ்தான் தேசியக்கொடியை உயர்த்தி விழாவை ஆரம்பித்தார்.

இந்நிகழ்வில், பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பாகிஸ்தானின் தேசிய தினத்தை குறிக்கும் விசேட செய்திகளும் வாசிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் கருத்து தெரிவிக்கையில், பாகிஸ்தான் கொள்கைகளின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியதோடு தமது தாய்நாட்டின் முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றில் மட்டுமல்லாமல், இரு நட்பு நாடுகளான பாகிஸ்தான் மற்றும் இலங்கையை மேலும் நெருக்கமாக கொண்டுவருவதிலும் பாகிஸ்தான் சமூகம் தங்கள் பங்கை திறம்பட ஆற்றுமாறும் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் ஆழமான நட்பையும் உயர்ஸ்தானிகர் இதன்போது நினைவுகூர்ந்தார். எதிர்காலத்திலும் இரு நட்பு நாடுகளும் இரு நாடுகளினதும் நலனுக்காக இந்த உறவினை மேலும் பலப்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

 

Related posts

பாராளுமன்றம் இன்று கூடுகிறது

மொட்டுக்கட்சி ரணிலுக்கே ஆதரவு – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம!

மியன்மார் இராணுவ ஆட்சியுடன் இலங்கை – வலுக்கும் சர்வதேச எதிர்ப்புகள் [VIDEO]