உள்நாடு

கொழும்பில் பல வீதிகள் மூடப்பட்டுள்ளது- அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்துவோருக்கும் எச்சரிக்கை

கொழும்பு நகரில் இன்று இரவு பல வீதிகளை மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவவினால் விசேட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அசம்பாவிதங்களை தடுக்கும் நோக்கில் இவ்வாறு பல வீதிகள் மூடப்படவுள்ளன.

இதன்படி, கொழும்பு பிரேக்புரூக் பிளேஸ், பொரள்ளை சுற்றுவட்டத்திலிருந்து தும்முல்ல சந்தி, பௌதலோக மாவத்தை, சேர் லேஸ்டர் ஜேம்ஸ் சுற்றுவட்டம் முதல் ரொடுன்டா சுற்றுவட்டம் வரையான வீதி மூடப்படவுள்ளது.

இதேவேளை,, மோசமான வானிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்தும் போது மின்னணு பலகைகளில் உள்ள எச்சரிக்கைகளை கவனத்தில் கொள்ளுமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது.

வாகனங்களுக்கு இடையில் 50 மீற்றர் இடைவெளியை பேணுமாறும், மின்னணு பலகைகள் அறிவுறுத்தியுள்ள வேகத்தை மீறக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

பதின்மூன்று “ப்ளசா”? சமஷ்டியா? வடகிழக்கு இணைப்பா? இவை குறித்து முதலில் பொது முடிவுக்கு, தமிழ் கட்சிகள் வர வேண்டும்

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுவோருக்கு சட்ட நடவடிக்கை

அஜித் நிவாட் கப்ரால் இராஜினாமா கடிதத்தினை கையளித்தார்