உள்நாடு

பெண்ணின் DNA அறிக்கை வெளியானது

(UTV | கொழும்பு) – கொழும்பு டேம் வீதியில் கடந்த முதலாம் திகதி தலையில்லாத நிலையில் மீட்கப்பட்ட சடலம் குறுவிட்ட, தெப்பனாவ பிரதேசத்தைச் சேர்ந்த யசோதா என்ற பெண்ணுடையது என மரபணு பரிசோதனைகளில் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சாட்சியங்களின் அடிப்படையில் குறித்த சடலம் யசோதாவினுடைய என கண்டறிந்த போதிலும் சடலத்தின் தலை துண்டிக்கப்பட்டிருந்தமையினால், மீட்கப்பட்ட சடலம் யாருடையது என்பதை முழுமையாக உறுதிப்படுத்துவதற்காக மரபணு பரிசோதனை செய்ய தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள பரிசோதனை அறிக்கைக்கு அமைய தாய் மற்றும் சகோதரனின் மரபணு மாதிரிகள் யசோதவின் மாதிரிகளுடன் ஒத்துபோகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

   

Related posts

பிறப்புச் சான்றிதழ் தொடர்பிலான புதிய அறிவித்தல்

பாணந்துறை அம்பியூலன்ஸ் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் முழு விபரம்

பொதுத் தேர்தல் தொடர்பான மனு விசாரணைகள் நாளை காலை வரை ஒத்திவைப்பு