(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 37,261 ஆக அதிகரித்துள்ளது.
இதன்படி, நேற்றைய தினத்தில் மாத்திரம் 594 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்று கொழும்பு மாவட்டத்தில் 253 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், கம்பஹா மாவட்டத்தில் 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 156 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 93 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 74 பேரும் பொலன்னறுலை மாவட்டத்தில் 73 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 91 பேரும் வவுனியா மாவட்டத்தில் 57 பேரும் மன்னார் மாவட்டத்தில் 16 பேரும் பதுளை மாவட்டத்தில் 77 பேரும் கொரோனா தொற்றுக்குள்ளானமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28,267 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 176 ஆக அதிகரித்துள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්