உள்நாடு

UPDATE – மேல் மாகாணம் முழுவதும் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு

(UTV | கொழும்பு) –  மேல் மாகாணத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

——————————————————————————– UPDATE

கொழும்பின் மூன்று பொலிஸ் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு

கொழும்பு தெற்கு, வடக்கு மற்றும் மத்திய பொலிஸ் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கோட்டகோகம மற்றும் மைனகோகம எதிர்ப்புத் தளங்களில் அரசாங்க சார்பு ஆதரவாளர்களுக்கும் அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் அசிங்கமான மோதல்கள் வெடித்ததை அடுத்து இது நடந்தது.

கோட்டகோகம எதிர்ப்பு தளத்தில் அமைக்கப்பட்டிருந்த பல கூடாரங்கள் மைனகோகமவை தாக்கிய குழுவினால் அகற்றப்பட்டு பின்னர் கோட்டகோகமவிற்குச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சிறைச்சாலை கைதிகளுக்கு அரச நிறுவனங்களில் தொழில் பயிற்சி

இன்று முதல் சமுர்த்தி வங்கிகளின் ஊடாக 5,000 ரூபா கொடுப்பனவு

இன்றும் நாளையும் சமையல் எரிவாயு விநோயோகம் இல்லை