சூடான செய்திகள் 1

கொழும்பின் பல பாகங்களுக்கு 18 மணிநேர நீர்வெட்டு

(UTV|COLOMBO) அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் நாளைய தினம் மட்டுப்படுத்தப்பட்ட நீர் விநியோகமே இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வெளியிட்டுள்ளது.

நாளை இரவு ஒன்பது மணி முதல் மறுநாள் பிற்பகல் 3.00 மணி வரை இந்த மட்டுப்படுத்தப்பட்ட நீர் விநியோகம் இடம்பெறவுள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பு 01, 13, 14 ,15 மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகளில் மட்டுப்படுத்தப்பட்ட நீர் விநியோகமே இடம்பெறும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

வவுனியாவில் , சூரிய மின்கலத் தொகுதி திறந்து வைப்பு- அமைச்சர்களான ரிஷாத், ரவி பங்கேற்பு

ரயில் பணிப்புறக்கணிப்பு – இன்று விசேட அமைச்சரவைக் குழுக் கலந்துரையாடல்

பாராளுமன்றம் டிசம்பர் 05ம் திகதி வரை ஒத்திவைப்பு