சூடான செய்திகள் 1

கொழும்பின் சில பகுதிகளில் இன்று நீர் வெட்டு

(UTVNEWS | COLOMBO) – கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் இன்று(23) மாலை 06 மணி முதல் 16 மணிநேர குறைந்த அழுத்த நீர் விநியோகம் மற்றும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு, தெஹிவளை – கல்கிஸ்சை, கோட்டே, கடுவலை நகரசபை உள்ளிட்ட பிரதேசங்கள், மகரகமை, பொரலஸ்கமுவை, கொலன்னாவை நகர சபைக்குட்பட்ட பிரதேசங்கள், கொட்டிகாவத்தை – முல்லேரியா நகரசபை உள்ளிட்ட பிரதேசங்கள், இரத்மலானை மற்றும் சொய்சாபுர தொடர் குடியிருப்பு தொகுதி ஆகியவற்றுக்கு குறைந்த அழுத்த நீர் விநியோகம் விநியோகிக்கப்படவுள்ளது.

மேலும், கொழும்பு 03,04,05,06 மற்றும் ஹோகந்தரை பிரதேசத்திற்கு முற்றாக நீர் வெட்டு அமுலில் இருக்கும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

மூன்றாம் இடத்தை பிடித்த இலங்கை!!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை

குப்பைகள் அடங்கிய கொள்கலன்களில் மனித எச்சங்கள் (Breaking news)