சூடான செய்திகள் 1

கொழும்பின் சில பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் மூவர் ஹெரோயினுடன் கைது

(UTV|COLOMBO)-கல்கிஸ்ஸ – சட்டிகல மாவத்தை பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் 205 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரத்மலானையை சேர்ந்த 41 வயதுடைய குறித்த சந்தேகநபர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை , பொரளை – வெலிகட சிறைச்சாலைக்கு அருகில் 24 கிராம் ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு 14 ஐ சேர்ந்த 50 வயதுடைய இவர் இன்றைய தினம் மாளிகாகந்த நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

அதேபோல் , மட்டக்குளி – கதிரான தோட்டம் பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 55 வயதுடைய சந்தேகநபரொருவர் 10 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

நடிகை தீபானி சில்வா கைது

கரையோர புகையிரத சேவைகள் வழமைக்கு

அலி ரொஷானுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி முதல் தொடர் விசாரணை