சூடான செய்திகள் 1

கொள்ளுபிட்டிய பிரதேச ஹெரோயின் சம்பவம் – கைது செய்யப்பட்ட ஐவரையும் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

(UTV|COLOMBO)-கொள்ளுபிட்டிய பிரதேசத்தில் 90 கிலோ நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் நேற்று கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் 06 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

அதன்படி ஐந்து பேரையும் எதிர்வவரும் 29ம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொள்ளுபிட்டியில் உள்ள சொகுசு வீடு ஒன்றில் வைத்து சுமார் 1080 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் ஐந்து பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

வௌிநாட்டுப் பிரஜைகள் மூவரும் இலங்கைப் பிரஜைகள் இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

 

 

 

 

Related posts

09 இலங்கையர்கள் விமான நிலையத்தில் கைது

மாகந்துரே மதூஷிடம் 24 மணித்தியாலங்கள் தொடர் விசாரணை

சமூக இடைவௌியை பேணாதவர்களை கைது செய்ய நடவடிக்கை