விளையாட்டு

கொல்கத்தா அணியிலும் கொரோனா

(UTV |  இந்தியா) – கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இன்று நடைபெறும் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டம் ஒத்திவைக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத உள்ளன. இந்த நிலையில், கொல்கத்தா அணியில் விளையாடும் தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தி மற்றும் கேரளாவை சேர்ந்த சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இன்று நடைபெறும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் ஒத்திவைக்கப்பட இருப்பதாக பிசிசிஐ அதிகாரி கூறியதாக ஏ.என்.ஐ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இதுபற்றி பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.

ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்கள் கடுமையான பயோ பாதுகாப்பு வளையத்தில் உள்ளனர். இதையும் மீறி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பஃப் டூ ப்ளெசிஸுக்கு LPL வாய்ப்பு

சில போட்டிகளிலிருந்து விலகிய சகலதுறை வீரர்

ஒலிம்பிக் இந்த ஆண்டின் இறுதி வரை ஒத்திவைக்கப்படலாம் – சீகோ ஹாஷிமோடோ