(UTV | கொழும்பு) – நாட்டில் நான்கு கொவிட்-19 மரணங்கள் பதிவானதை அடுத்து கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600ஐ கடந்துள்ளது.
இதற்கமைய மஹரகமை பகுதியை சேர்ந்த 76 வயதான ஆண் ஒருவர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கொவிட்-19 தொற்றுள்ளமை கண்டறியப்பட்டதை அடுத்து அவர் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திற்கு மாற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.
கொவிட்-19 நிமோனியா நிலை, உயர் குருதி அழுத்தம், இருதய நோய் என்பன இந்த மரணத்திற்கான காரணங்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதான பெண்ணொருவரும் கொவிட்-19 தொற்றால் மரணித்தார்.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தொற்றுறுதியானதை அடுத்து அவர் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திற்கு மாற்றப்பட்டிருந்தார்.
குருதி விஷமானமையால் ஏற்பட்ட அதிர்ச்சி, தீவிர சிறுநீரக பாதிப்பு, நீரிழிவு உள்ளிட்ட நோய் நிலைமைகளால் நேற்றைய தினம் அவர் உயிரிழந்தார்.
நாரஹேன்பிட்டி பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து கொவிட்-19 தொற்றுறுதியானவர் என அடையாளம் காணப்பட்டார்.
இதையடுத்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அவர் நேற்று உயிரிழந்தார்.
கொவிட்-19 தொற்று, நீண்டகால நுரையீரல் நோயுடன் குருதி விஷமானமை மற்றும் வலது நுரையீரல் செயலிழந்தமை என்பன அவரின் மரணத்திற்கான காரணங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
காலி பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஆண் ஒருவர், மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் வைத்து, கொவிட்-19 தொற்றுறுதியானவர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து, தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் மரணித்தார்.
கொவிட்-19 தொற்றுறுடன், இரத்தவாதம் மற்றும் லியூகேமியா நிலையே அவரின் மரணத்திற்கான காரணங்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2021/02/utv-news-alert-2.png)