உலகம்

கொரோனா – 185 நாடுகளை ஆட்டிப்படைக்கும் வைரஸ்

(UTV | கொழும்பு) –  கொரோனா வைரஸ் தற்போது உலகின் 185 நாடுகளில் பரவியுள்ளது.

இந்நிலையில், ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா உள்பட உலகின் அனைத்து பகுதிகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி கொரோனா தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 11 ஆயிரத்து 397 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 லட்சத்து 75 ஆயிரத்து 427 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 88 ஆயிரத்து 250 பேர் சிகிச்சைக்கு பின் வௌியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இத்தாலியில் தொடர்ந்து அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரசுக்கு நேற்று மட்டும் அதிக அளவாக 627 பேர் பலியாகி உள்ளனர்.

இதன்மூலம் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 4032 ஆக உயர்ந்துள்ளது.

Related posts

ஹொண்டுராஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

அமெரிக்காவில் பிறக்கும் வெளிநாட்டவர் குழந்தைகளுக்கு குடியுரிமை கிடையாது – டொனால்ட் டிரம்ப் முடிவு

editor

வௌிநாட்டு மாணவர்களை மீள அனுப்பும் திட்டம் கைவிடப்பட்டது