(UTV|சுவிட்சலாந்து) – கொரோனா வைரஸ் தொற்று பரவல் இரண்டு வருடங்களுக்குள் முடிவுக்கு வரலாம் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
1918ஆம் ஆண்டு ஏற்பட்ட ஸ்பானிஷ் ஃப்ளு மறைய இரண்டு வருடங்கள் எடுக்கப்பட்டதாக ஜெனீவாவில் செய்தியாளர்களிடம்
எனினும், தற்போதுள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்களை கொண்டு நோய்த்தொற்று பரவலை “குறுகிய காலத்தில்” கட்டுப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
மேலும், மனிதர்களுக்கிடையேயான தொடர்புகள் அதிகரித்துள்ளதால், வைரஸ் பரவலுக்கான வாய்ப்பு நிறைய உள்ளது என்று அவர் கூறுகிறார்.
இதேவேளை, நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்கான தொழில்நுட்பமும், அறிவும் நம்மிடம் உள்ளது. தற்சமயத்தில் நமக்கு தேச ஒற்றுமையும், உலகளாவிய ஒற்றுமையும் மிகவும் அவசியமானது.”
கடந்த 1918ஆம் ஆண்டு ஏற்பட்ட ஸ்பானிஷ் ஃப்ளு பெருந்தொற்றால் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் ஐந்து கோடி மக்கள் உயிரிழந்தனர்.
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் இதுவரை உலகம் முழுவதும் எட்டு லட்சம் பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2.27 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.