உள்நாடு

கொரோனா வைரஸ் தொற்றாளர் விபரம் இதோ

(UTVNEWS | COLOMBO) -இலங்கைக்குள்ளே இலங்கையைச் சேர்ந்த முதலாவது கொரோனா வைரஸ் தொற்றாளர் இன்று இனங்காணப்பட்டார். 

இவர் மத்தேகொட பகுதியை வசிப்பிடமாக கொண்ட ஜயந்த ரணசிங்க என்பவர், இத்தாலி மொழி பேசும் சுற்றுலா சாரதி வழிக்காட்டி என்பதுடன் விரிவுரையாளருமாவார்.

52 வயதான ஜயந்த ரணசிங்க கடந்த 9 ஆம் திகதியே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் கடந்த மூன்றாம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை சீகிரியா, பொலன்னறுவை மற்றும் கண்டி ஆகிய இடங்களில் சுற்றுலா பயணங்களில் ஈடுபட்டுள்ளதுடன் அந்த இடங்களில் உள்ள விடுதிகள் பலவற்றிலும் தங்கியுள்ளனர்.

பின்னர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் விடை கொடுத்து திருப்பியனுப்பிய ஜயந்த ரணசிங்க மத்தேகொடையில் உள்ள வீட்டிற்கு மீள சென்றுள்ளார்.

அதன் பின்னரே குறித்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டள்ளார்.

தற்போது அங்கொட தேசிய தொற்றுநோய் ஆய்வு பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிபபிடத்தக்கது.

Related posts

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை குறைவு!

அரச திணைக்களங்களுக்கான ஜனாதிபதியின் திடீர் விஜயம்

தரப் பரிசோதனையில் தோல்வியடைந்த மருந்துகள் வெளியான முடிவுகள்!