கேளிக்கை

கொரோனா வைரஸ் தொற்றால் வாசனை திறனை இழந்தார் பிரபல பாடகர்

(UTVNEWS | அமெரிக்கா ) – ஹாலிவுட் நடிகரும், பிரபல அமெரிக்க பாப் பாடகருமான ஆரோனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிபடுத்தி அவர் கூறியிருப்பதாவது:- “எனக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தெரிந்தன. உடனடியாக பரிசோதனை செய்தேன். தற்போது எனக்கு கொரோனா தொற்று இருப்பதை வைத்தியர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

தற்போது நான் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறேன். கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது. வாசனைத் திறனையும், சுவையையும் இழந்து விட்டேன். இந்த வைரஸ் யாரை வேண்டுமானாலும் தாக்கும். அனைவரும் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் இருங்கள்’. என அவர் கூறியுள்ளார்.

Related posts

ப்ரியா ஆனந்தை அப்படி பார்க்கவில்லை! கௌதம் கார்த்திக் விளக்கம்

ரஜினிக்கு சரியான ஜோடி நானே…

சமூக திரில்லராக ‘புளூவேல்’