உலகம்

துருக்கியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு முதல் நபர் பலி

(UTV|துருக்கி) கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு துருக்கி நாட்டில் முதல் நபர் இன்று உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 7 ஆயிரத்து 987 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும், ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 426 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.

கொரோனா வைரஸ் மத்திய கிழக்கு நாடான துருக்கியிலும் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு முதல் பலியாக 89 வயது நிரம்பிய முதியவர் இன்று உயிரிழந்துள்ளார். மேலும், 98 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை மந்திரி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

Related posts

குச்சி ஐஸில் குட்டி பாம்பு – ஆசையாக வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

editor

உக்ரைனுக்கு 70 போர் விமானங்களை அனுப்புகிறது ஐரோப்பிய நாடுகள்

உலக சந்தையில் எகிறும் மசகு எண்ணெய் பீப்பாயின் விலை