உலகம்சூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் குறைந்தது 213 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் 18 நாடுகளில் 98 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த உலக சுகாதார நிறுவனம், மற்ற நாடுகளில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்று மேலும் தெரிவித்துள்ளது.

மற்ற நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் சீனாவின் வுஹான் நகரத்தில் இருந்து பயணம் செய்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனீவாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ், கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை இல்லாத அளவு பரவி வருவதாகவும், முன்னெப்போதும் இல்லாத அளவு அதற்கு சீனா நடவடிக்கைள் எடுத்து வருவதாகவும் தெரவித்துள்ளார்.

Related posts

மழையுடன் கூடிய வானிலை அதிகரிக்கலாம்

கைதிகளுக்கு பொது மன்னிப்பு

ஞானசார தேரர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்