கிசு கிசு

கொரோனா வைரஸ்; இரண்டாவது நபர் யார் தெரியுமா?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –இலங்கையில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்குள்ளானதாக இரண்டாவது நபர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நபர் இதற்கு முன்னர் அந்த வைரஸ் தொற்றியதாக உறுதியாகிய நபருடன் தொடர்பில் இருந்தவர் என தெரியவந்துள்ளது.

44 வயதுடைய இரண்டாவது நபரும் சுற்றுலா வழிக்காட்டி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இருவரும் தம்புளை பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் ஒன்றாக தங்கியிருந்ததாக சுகாதார சேவை இயக்குனர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

முதலாவதாக தொற்றுக்குள்ளான இலங்கையருடன் இந்த நபருக்கு தொற்றியிருக்கலாம் என நம்பபப்படுகின்றது.

Related posts

ரசிகர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் அரசு அவதானம் செலுத்த வேண்டும்

திலினி உள்ளிட்ட நால்வருக்கு, நவம்பர் 30 வரை விளக்கமறியல்!

மொட்டு கட்சியில் வாய்ப்பை இழந்த தில்ஷான் (PHOTO)