உலகம்

இதைவிட சிறப்பாக போராட உலகம் தயாராக இருக்க வேண்டும்

(UTV | சுவிட்ஸலாந்து) -எதிர்வரும் காலத்தில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றை சமாளிப்பதற்காக உலகம் தற்போதைய நிலைமையை விட சிறப்பாக சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி உலகளாவிய ரீதியில் 27,489,198 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் , கொரோனா வைரஸ் தொற்றினால் 896,867 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், அடுத்த பெருந்தொற்றை சிறப்பாக சமாளிக்க உலகம் தயாராக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் வைத்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த கொரோனா வைரஸ் தொற்று உலகின் கடைசி வைரஸ் பெருந்தொற்று அல்ல எனவும்
பெருந்தொற்றும், சமூகப்பரவலும் வாழ்க்கையில் உண்மையானவை என்பதை வரலாறு நமக்கு கற்றுக்கொடுத்துக்கொண்டுதான் உள்ளது. ஆனால், அடுத்த பெருந்தொற்று வரும் நேரத்தில் உலகம் தற்போதுள்ள தயார் நிலையை விட இன்னும் சிறப்பான சமாளிக்க தயாராக இருக்க வேண்டும்’ எனவும் கூறியுள்ளார்.

Related posts

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் சாத்தியம்

சர்வதேச எயிட்ஸ் தினம் இன்று!

ஓமானில் மனித கடத்தல் – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை