விளையாட்டு

கொரோனா வலையில் மொயீன்

(UTV | கொழும்பு) –  கிரிக்கெட் தொடருக்காக இலங்கை வந்துள்ள இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் மொயீன் அலிக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அவா் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

அவருடன் நேரடித் தொடா்பில் இருந்திருக்க வாய்ப்புள்ளதாக அறியப்படும் கிறிஸ் வோக்ஸும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட இருப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. அதேபோல், எஞ்சிய இங்கிலாந்து அணியினரும் பரிசோதிக்கப்படவுள்ளனா்.

முன்னதாக, இங்கிலாந்தில் இருந்து புறப்படும்போது மொயீன் அலிக்கு கொரோனா பாதிப்பு இல்லாது இருந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை வந்தபோது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று இருப்பதாக உறுதியாகியுள்ளது.

இலங்கையில் இரு டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கிரஹம் ஃபோர்ட்டின் விருப்பத்தை நிறைவேற்றுவாரா மாலிங்க!!!

நியூசிலாந்து அணி 578 ஓட்டங்கள்

இலங்கை அணி படு தோல்வி…