உள்நாடு

கொரோனா : பலி எண்ணிக்கை 204 ஆக அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –   இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 204 ஆக அதிகரித்துள்ளது.

தர்கா பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவரும், ஹோமாகமை பிரதேசத்தை சேர்ந்த 59வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு 05 பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய பெண் ஒருவரும், கலேவெல பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் பெல்மடுல்ல பிரதேசத்தை சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts

MTFE SL நிறுவனத்திற்கு இலங்கை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நிதியமைச்சர் இந்திய பிரதமரை சந்தித்தார்

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினம் இன்று