உலகம்

கொரோனா பரிசோதனை நிறைவு- 454 பேருக்கு பாதிப்பு

(UTV|ஜப்பான் )- ஜப்பானின் யோகாஹாமா துறைமுகத்தில் நிற்கும் Diamond Princess கப்பலில் கொரோனா பரிசோதனை நிறைவடைந்த நிலையில், மொத்தம் 454 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஹாங்காங்கில் இருந்து ஜப்பானுக்கு வந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசு கப்பலை கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக யோகாஹாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு, பயணிகள் வெளியேற தடை விதிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் கப்பலில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் என அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டன. கடந்த சில நாட்களாக நீடித்த இந்த பணி நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், கப்பலில் 2,666 பயணிகள் மற்றும் 1,045 ஊழியர்கள் என மொத்தம் 3,711 பேர் இருந்தனர்.

இதில் 5 இந்தியர்கள் உள்பட மொத்தம் 454 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

ஈராக்கில் பதற்றம் : மோதலில் 20 பேர் பலி

படகு விபத்து – 38 பேர் பலி – 100 க்கும் மேற்பட்டோரை காணவில்லை

editor

முத்தத்தால் சர்ச்சை : கால்பந்து சங்க தலைவர் லூயிஸ் தாயார், உண்ணாவிரதத்தில்