உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகள் 650 பேர் சிகிச்சையில்

(UTV | கொவிட்-19 ) – இலங்கையில் இன்று மொத்தமாக 25 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்ஹ தெரிவித்துள்ளார்.

குறித்த தொற்றாளர்களின் 14 பேர் கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்திலும் 11 பேர் சேனபுர தனிமைப்படுத்தல் நிலையத்திலும் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2642 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1981 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது, 650 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மண் மேடு சரிந்து ஒருவர் பலி

இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு