உள்நாடு

கொரோனா நோயாளிகளுக்கான விசேட அறிவித்தல்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றாளர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 14 நாட்களின் பின்னர் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளாமல் வைத்தியாசலையில் இருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எந்தவொரு கொரோனா அறிகுறியும் இல்லாதவர்களே இவ்வாறு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

5,355 கொரோனா தொற்றாளார்கள் நாடளாவிய ரீதியில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களின் அதிகரிப்பு, ஆய்வக வசதிகள் மற்றும் வைத்தியசாலை இடப்பற்றாக்குறை என்பவை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இனங்காணப்படும் கொரோனா தொற்றாளர் ஒருவர் எந்தவொரு கொரோனா அறிகுறியும் இல்லாத நிலையில் 14 நாட்களின் பின்னர் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளாமல் வைத்தியாசலையில் இருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுளளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொழும்பில் 16 மணிநேர நீர் வெட்டு!

குடும்பங்களுக்கு, காப்புறுதித் தொகையை கோரும் MPக்கள்!

ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார் நசீர் அஹமட்

editor