(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 14,285 ஆக அதிகரித்துள்ளது.
இதன்படி, நேற்றைய தினம் 356 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், பேலியகொடை மற்றும் மினுவாங்கொடை கொரோனா கொத்தணிகளில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 10,619 ஆக காணப்படுகிறது.
அத்துடன், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8880 ஆக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், 5369 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2020/11/utv-news-2-1024x576.png)