உள்நாடு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு

(UTV | கொழும்பு) – இலங்கையில் புதிதாக மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 7 பேருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,169 ஆக அதிகரித்துள்ளதோடு, கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,969 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கொரோனா வைரஸ் (கொவிட் – 19) தொற்றுக்கு உள்ளாகி 12 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இளம் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் – விரைகிறது விசாரணைக்குழு

கல்வித்துறையில் புதிய சகாப்தம் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

அதிவேக நெடுஞ்சாலையில் நுழைவதற்கு முன் எரிபொருள் அளவினை சரிபார்க்கவும் – RDA