உள்நாடு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் உயர்வு

(UTV | கொழும்பு)- இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,101 ஆக அதிகரித்துள்ளது.

இதனப்டி நேற்றைய தினத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 09 பேர் அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கட்டாரில் இருந்து நாடுதிரும்பிய ஒருவருக்கும், ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து வந்த 2 பேருக்கும், குவைத்தில் இருந்து வந்த 2 பேருக்கும், இந்தியாவில் இருந்து வந்த 4 பேருக்கும் நேற்று கொரோனா வைரஸ் தொற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், தற்போது 206 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, தொற்றிலிருந்து 2,883 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகின்றது

பொது மன்னிப்பின் கீழ் 444 கைதிகள் விடுதலை

மழையுடனான காலநிலை தொடரும்