உள்நாடு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு

(UTV | கொழும்பு)- இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,049ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம்(31) 37 கொரோனா தொற்றுக்குள்ளானோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 31 பேரும் கட்டாரில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தற்போது 169 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, தொற்றிலிருந்து 2,868 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, நேற்றைய தினம் 2020 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இதுவரை 2 இலட்சத்து 26 ஆயிரத்து 111 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

Related posts

நாடளாவிய ரீதியில் இன்று மாலை முதல் ஊரடங்குச் சட்டம் அமுலில்

சர்வதேச “FACETS Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியில் ஜனாதிபதி பங்கேற்பு

editor

அரச அதிகாரிகளுக்கான அறிவித்தல்