உள்நாடு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,324 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, நாட்டில் நேற்றைய தினம்(23) 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

ரஷ்ய விமான ஊழியர் ஒருவருக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பிய 7 பேருக்கும், எத்தியோப்பிலிருந்து திரும்பிய ஒருவருக்கும்
அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய இருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3129 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், தற்போது 182 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகினறனர்.

Related posts

இந்தோனேசியாவுக்கு அடித்துச்செல்லப்பட்ட இலங்கை படகுகள்

MT New Diamond – நட்டஈடாக 440 மில்லியன் ரூபா [UPDATE]

சர்வதேசத்த்தினை நாட கர்தினால் ஆராய்வு